lovers fort or Namakkal Fort?
Contact us to Add Your Business
lovers fort or Namakkal Fort?
Namakkal Fort is a historic fort present in Namakkal in Namakkal district in the South Indian state of Tamil Nadu. The fort was built during the reign of Thirumalai Nayak of Madurai in 17th century.[1]The fort is located on the top of a hillock made of a single rock, 75 m (246 ft) tall. There is a temple and a mosque that are located within the fort, both of which are popular tourist attractions of the town. In modern times, the fort is under the control of the Archaeological Department of the Government of Tamil Nadu.
நாமக்கல் மலைக்கோட்டை காதலர்களின் கோட்டையாக மறுகிறது. பாறையின் மீது ஆபத்தை உணராமல் அமரும் காதலர்கள்
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டையை சுற்றி உள்ள பாறை விளிம்புகளில் ஆபத்தை உணராமல் காதலர்கள் அமர்ந்து காதல் கதை பேசி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். மலைக்கோட்டைக்கு பாதுகாவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் மலைக்கோட்டை அமைந்துள்ளது. கோட்டையின் எதிரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில், கோட்டை அடிவாரத்தில் நாமகிரியம்மன், ரங்கர் சன்னதி கோவில் அமைந்துள்ளது. தவிர, மலை மீது திப்புசுல்தான் கோட்டை அமைந்துள்ளது.
அக்கோட்டையினுள் தானியக் கிடங்கு, ஆயுதக் கிடங்கு உள்ளிட்டவை பழமை மாறாமல் அமைந்துள்ளது. மலை உச்சியில் உள்ள கோட்டை மதில்களுக்கு இடையே, இரு குளங்கள் அமைந்துள்ளது. அவற்றை தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பராமரிப்பு செய்து வருகின்றனர். பழம்பெருமை வாய்ந்த இம்மலைக்கோட்டை, தற்போது காதலர்கள் மற்றும் கள்ளக்காதலர்களிடம் புகலிடமாக உள்ளது. அவ்வாறு வரும் காதலர்கள், ஆபத்தை உணராமல் ஆங்காங்கே உள்ள பாறைகளின் விளிம்பில் அமர்ந்து காதல் வளர்த்து வருகின்றனர்.நாமக்கல்லுக்கு பெருமை சேர்ப்பதில் மலைக்கோட்டைக்கு மிக முக்கியத்துவம் உள்ளது. நாமக்கல் நகரில் எந்த பகுதிகளில் இருந்து பார்த்தாலும் பார்வையில் படும்படி கம்பீரமான தோற்றத்துடன் இந்த கோட்டை அமைந்துள்ளது. இக்கோட்டையை பார்வையிட வரும் பார்வையாளர்கள், அங்குள்ள பாறையில் ஆணியை கொண்டு பெயர் செதுக்குதல், குடைதல் உள்ளிட்ட பல்வேறு தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சில இடங்களில் பார்வையாளர்கள் முகம் சுழிக்கும் வகையிலான வாசகங்களையும் அவர்கள் பொறித்து வைத்துள்ளனர். அதேபோல், மலைக்கோட்டைக்கு வரும் காதல் மற்றும் கள்ளக்காதல் ஜோடிகள் பாறைகளின் விளிம்பில் ஆபத்தை உணராமல் அமர்ந்து, சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாறை விளிம்பில் இருந்து சிறிது சறுக்கினால் கீழே விழுந்து காயம் அடைய நேரிடும். மலைக்கோட்டைக்கு வரும் காதலர்கள் பாறையின் விளிம்பில் அமர்வது ஆபத்து என்பதை உணர வேண்டும். மலைக்கோட்டைக்கு ஒரு பாதுகாவலரையாவது நியமிக்க வேண்டும்.
பேட்டி. மகோரன்.
This Video Covered From Namakkal District Reporter (Tamil Nadu) From South Indian Crime Point Weekly. For More Details Pl Visit : or or or or or
8903415268
I am coming
Don’t waste food items
Thanks a lot for Uploading..had been to Namakkal but never witnessed LORD HANUMAN Abishekam..Thanks once again..