வெறுங்கை என்பது மூடத்தனம் – உன் விரல்கள் பத்தும் மூலதனம்! – நாளும் பல நற்செய்திகள் | 08-09-2022
Contact us to Add Your Business
வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் – உன்
கைகளில் பூமி சுழன்றுவரும்!
தோள்கள் உனது தொழிற்சாலை – நீ
தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை
தோல்விகள் ஏதும் உனக்கில்லை – இனி
தொடுவானம்தான் உன் எல்லை!
விழி விழி உன் விழி நெருப்பு விழி – உன்
விழிமுன் சூரியன் சின்னப்பொறி
எழு எழு தோழா உன் எழுச்சி – இனி
இயற்கை மடியில் பெரும் புரட்சி!
விரக்தி எனும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலி நீ தூங்குவதா? – நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சக் கீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?
மூலையில் கிடக்கும் வாலிபனே – தினம்
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலைவனம்தான் வாழ்க்கையென – வெறும்
பல்லவி எதற்குப் பாடுகிறாய்!
நீட்டிப் படுத்தால் உலக உருண்டையில்
நீதான் பூமத்திய ரேகை – நீ
போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான்
பூமி வலம் வரும் புதுப்பாதை!
கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்துச்சொல் – உன்
சுட்டு விரலின் நகமாய் வானம்
சுருங்கியதென்று முழங்கிச்செல்!
கால்நகம் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடிவரும் – உன்
தோள்களிரண்டும் தெற்கு வடக்காய்
துருவங்களுக்குப் பாலமிடும்!
மண்புழுவல்ல மானிடனே – உன்
மாவலி காட்டு வானிடமே
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே – இவை
வேலைகளல்ல வேள்விகளே!
– கவிஞாயிறு தாராபாரதி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
நமது வாக்கு நமது ஆயுதம் . ?????? ??????
இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ??????????????
?????????
Very nice Seeman Anna
NAAM TAMILAR ???❤️????
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
சிறப்பு ☝️????♥️
அருமை அண்ணா நாம் தமிழர்
???
❤️❤️❤️
????
?????????
??????
??????
Super anna