Login

Lost your password?
Don't have an account? Sign Up

இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல #TNRejectsEIA2020 மின்னஞ்சல் பரப்புரையில் பங்கேற்போம் -சீமான்

Contact us to Add Your Business

பேரன்புக்கொண்டு நான் பெரிதும் நேசிக்கும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்!

நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; இது உலக உயிர்களின் உயிர் உடைமை! பல கோடிக்கணக்கான உயிர்களின் உலகம் இது; உயிர்கள் வாழ்வதற்கு வாய்ப்பற்ற பூமியாக இதை மாற்றிவிட்டார்கள்; வேறு கிரகங்களை நோக்கி படையெடுங்கள் என்கிறார் ஸ்டீபன் ஹாக்கின்ஸ்.

இங்குப் பல நாசகார நச்சுத்திட்டங்களை, தொழிற்சாலைகளைக் கொண்டுவந்து நிலத்தை, வளத்தை, நீரை, காற்றை, உணவை எல்லாவற்றையும் நஞ்சாக்கி விட்டார்கள். இச்சூழலில் வருங்காலத் தலைமுறை பிள்ளைகள் வாழ்வதற்கு வாய்ப்பான பூமியாக இதை வைத்துவிட்டுப் போகவேண்டும் என்கிற பேரார்வத்தில் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். இதில் குறிப்பாக நாம் தமிழர் – சுற்றுச்சூழல் பாசறையினர் பெருமுயற்சி எடுத்து அரும்பணியாற்றிவருகிறார்கள்.

EIA2020 – சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை, சூழலியல் பாதுகாப்புக்கு நேர் எதிராக இருக்கிறது என்பதால் அதை நாம் எதிர்க்கிறோம். நாம் எல்லோரும் சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மின்னஞ்சல் பரப்புரையில் இணைந்து நமது எதிர்ப்பினைப் பதிவு செய்வதன் மூலமாக இந்த வரைவு சட்டமாகாமல் தடுக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் #TNRejectsEIA2020 எனும் குறிச்சொல்லைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்களிலும் நமது கருத்துகளை, எதிர்ப்பைத் தெரிவிப்போம். கீழேயுள்ள மின்னஞ்சல் இணைப்பைச் சொடுக்கி உங்கள் பெயரை பதிவு செய்து மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் சட்ட வரைவைத் திரும்பப்பெற வைக்கும் இப்பரப்புரையில் பங்கேற்போம். இது நமது கடமை; நாம் அனைவரும் தவறாமல் இதைச் செய்ய வேண்டும் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

நன்றி! வணக்கம்!
நாம் தமிழர்!

To Protect Our Environment, Let's Join Together to Seek Withdrawal of Draft EIA Notification, 2020!

Please Follow This Email Link:

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus

admin
Author: admin

https://www.namakkaldistrict.com

27 comments

  1. Nathiya Ashok

    ?வணக்கம் அண்ணா…நிச்சயமாக அண்ணா … நம் தாய்நிலம் காப்போம் நாம் தமிழர்

    1. சீமான் தம்பிகளில் ஒருவன்

      நேரடியாக உலாவியில் இணைப்பை தட்டச்சு செய்யவும்

  2. Tamizham tamizh thai தமிழம் தமிழ் தாய்

    எம் தமிழின சொந்தங்களுக்கு புத்தியில் சக்தி ஊறட்டும் பிறகு அது ஒற்றுமையாய் மாறட்டும் நமக்கு இனிமேல் நேர அவகாசம் இல்லை
    இனி இருக்கும் ஒவ்வொரு துளியும்
    சிறப்பாக பயன்படுத்துவோம்.

  3. purushoth pandiyan

    எனது வாக்கை செலுத்திவிட்டேன் சகோதரரே நம் நாடு நம் உரிமை
    வாழ்க தமிழ் தாய்
    வாழ்க தமிழ் மொழி
    வாழ்க தமிழ் மக்கள் ???

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*